முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9-ம் தேதி ஜனாதிபதி தேர்தல்: பாகிஸ்தானில் ஆசிப் அலிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திய இம்ரான்கான்

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      உலகம்
Pak 2024-03-02

Source: provided

இஸ்லாமாபாத் : வரும் 9-ம் தேதி பாகிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக முகமது கான் அசாக்ஜாயை அவரது கட்சி சார்பில் இம்ரான்கான் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நவாஸ் ஷெரீப் கட்சியும், பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. 

கடந்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற்ற போதிலும் இதுவரை அரசு அமைக்கப்படவில்லை. நவாஸ் ஷெரீப்- பிலாவல் கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான் முகமது கான் அசாக்ஜாயை அவரது கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். முகமது கான் அசாக்ஜாய் பஸ்துன்-க்வா மிலி-அவாமி கட்சியின் தலைவர் ஆவார். சன்னி இத்தேஹாட் கவுன்சில் ஆதரவு பெற்றவர். 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், அதிபர் தேர்தலில் முகமது கான் அசாக்ஜாய்க்கு வாக்களிக்கும்படி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி வரும் 9-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. 

ஆனால், அரசியல் அசாதார சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். பாகிஸ்தான் தேர்தல் விதிப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் மற்றும் நான்கு மாகாண உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து