முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.

அடிக்கடி முறையீடு...

இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 3ஆவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த மைதானத்தில் பந்து வீசும்போது இந்திய அணி வீரர்கள் பந்து அடிக்கடி தனது வடிவத்தை  இழந்து விடுகிறது, பந்தை மாற்றித் தரும்படி நடுவரிடம் அடிக்கடி முறையிட்டனர். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளின்போதும் இதே பிரச்சனை இருந்தது. ரிஷப் பண்ட் கோபமாக நடுவர் முன்னே பந்தை கோபத்தில் வீசினார்.

வீசமுடியவில்லை...

இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவிடம் செய்தியாளர்கள் டியூக்ஸ் பந்து அடிக்கடி மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பும்ரா பதில் அளித்ததாவது:- பந்தின் வடிவம் மாறியது. உண்மையிலேயே என்னால் பந்தை கட்டுக்கோப்புடன் வீசமுடியவில்லை. நான் பணத்தை இழக்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு, அதிக ஓவர்கள் விளையாடினே். ஆகவே, எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை.

சண்டையிட முடியாது...

இருந்த போதிலும், நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம். அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது. சில நேரங்களில் அது நம் வழியில் செல்லும். சில நேரங்களில் மோசமான பந்தை பெறுவோம். அப்படித்தான் நடக்கும். இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து