முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகத்தை வீழத்தி இறுதிக்கு முன்னேறியது மும்பை அணி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      விளையாட்டு
Mumbai 2024-03-04

Source: provided

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை வீழத்தி இறுதிக்கு முன்னேறியது மும்பை அணி.

41 முறை சாம்பியன்....

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு அரையிறுதி போட்டியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழகம் 146 ரன்களில் சுருண்டது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி தமிழக பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தது.

51.5 ஓவர்கள் மட்டுமே... 

அந்த அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் 109 ரன்களும், தனுஷ் கோட்டியான் 89 ரன்களும் குவித்தனர். தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் 232 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி முதல் இன்னிங்சை போலவே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 51.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தமிழகம் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற மும்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

ஷாம்ஸ் முலானி... 

தமிழக அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 70 அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. மும்பை அணியில் அதிகபட்சமாக ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து