முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
Annamalai 2024-03-27

Source: provided

கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மும்முனை போட்டி நிலவுகிறது.

பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

நகர்ப்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.முக்கிய இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசனையும் மேற்கொள்கிறார். 

இந்நிலையில் நேற்று கோவை கோனியம்மன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு கோவைப் புதூரை சேர்ந்த ரவி - தேவிகா ஆகியோருக்கு திருமண நிகழ்வு நடைபெற்றது. புதுமண தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி வீர கணேசனின் அம்மாவிடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.

அதை தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தாக்கல் செய்தார்.  

அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடன் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து