முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6,700க்கு விற்பனையானது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.145 குறைந்து ரூ.6,700க்கு விற்பனையானது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ஒரு கிராம் ரூ.86.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500 ஆகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து