முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய வீராங்கனை சாதனை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      விளையாட்டு
26-Ram-58-1

Source: provided

மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதன் 5-வது ஆட்டம் பாலியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய மங்கோலியா 16.4 ஓவர்களில் வெறும் 24 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தோனேசியா 127 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.

அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்த இந்தோனேசியா சுழற்பந்து வீச்சாளர் 17 வயதான ரொமாலியா, 3.2 ஓவர் பந்து வீசி 3 மெய்டனுடன் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு நெதர்லாந்தின் பிரடெரிக் ஒவர்டிக் 2021-ம் ஆண்டில் பிரான்சுக்கு எதிராக 3 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது. இதைத் தொடர்ந்து நடந்த கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தோனேசியா அபார வெற்றி பெற்றது. இதில் மங்கோலியா நிர்ணயித்த 52 ரன் இலக்கை இந்தோனேசியா 9.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.

பாண்ட்யா குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் 

தற்போது நடைபெற்று வரும் சீசனில் மும்பை அணியின் தோல்விகளுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத பாண்ட்யா கேப்டனாகவும் சுமாராக முடிவுகளை எடுத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை பி.சி.சி.ஐ. தீர்மானித்துள்ளது. அதனாலேயே டி20 போட்டிகளில் சில காலம் ஓய்வெடுத்த ரோகித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா பல தொடர்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் நுணுக்கங்கள் ரீதியாக பாண்ட்யா இன்னும் கேப்டனாக வளரவில்லை என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். எனவே அவரை டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமித்தால் அது இந்தியாவை பாதாளதுக்கு தள்ளிவிடும் என்று பி.சி.சி.ஐ.யை மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "நுணுக்கமான திட்டங்கள் ரீதியாக அவர் தனது வேலையை சரியாக செய்வதை நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் அவர் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள், பந்து வீச்சில் சில மாற்றங்கள் செய்கிறார். ஒட்டுமொத்தமாக கேப்டன்ஷிப்புக்கு தேவையான உத்திகளை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்" என கூறினார். 

டெல்லி அணியில் குல்படின் நைப்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல்- ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தசைபிடிப்பால் அவதிப்படுகிறார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் தாயகம் திரும்பி விட்டார். அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் குல்படின் நைப்பை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் 65 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ள குல்படின் நைப் 3 அரைசதம் உள்பட 807 ரன்களும், 26 விக்கெட்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து