முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      உலகம்
White-House 1

வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது. அதேநேரம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகச் சொல்லி 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதில் மூன்று இந்திய நிறுவனங்களும் அடக்கம்.

ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகச் சொல்லி சில தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீதும் கூட அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் கருவூலத்துறை (டிபார்ட்மண்ட் ஆப் டிரசரி) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த சஹாரா தண்டர் நிறுவனம், அந்நாட்டு ராணுவத்துக்கு ஆளில்லா விமானங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த சஹாரா தண்டர் நிறுவனத்திற்கு உதவியாக இருந்ததாக ஜென் ஷிப்பிங், போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீ ஆர்ட் ஷிப் மேனேஜ்மென்ட் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து