முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொன்னதை செய்த கம்மின்ஸ்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      விளையாட்டு
Cummins-2024-03-28

மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர். ஒரு வாரத்துக்கு முன்பாக பேட்டி ஒன்றில் கூறியதை தற்போது செய்து காட்டியுள்ளார் பாட் கம்மின்ஸ். அதிரடியான தொடக்கம் தேவை என கூறியிருந்தார். அதேபோல மும்பைக்கு எதிரான போட்டியில் பவர்பிளேவில் 81 ரன்களை அடித்து அசத்தினார்கள் ஐதராபாத் தொடக்க வீரர்கள்.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய மண்ணில் பல லட்சம் மக்களை அமைதியாக்குவது மிகவும் பிடிக்கும் எனக் கூறி அதேபோல் விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தி, மைதானத்தில் இந்திய மக்களை அமைத்தியாக்கினார். இதற்கும் முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை வென்றார். தற்போது ஐபிஎல்-இல் சொன்னதுபோலவே அதிரடியான தொடக்கத்தை ஐதராபாத் அணி வழங்கியுள்ளது. 2வது முறையாக ஐதராபாத் அணி கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

கேப்டன்சி குறித்து விமர்சனம்

மும்பை அணியின் பந்து வீச்சு மோசமானதாக இருந்ததாகவும் ஹார்திக்கின் தலைமைப் பண்பினையும் பலரும் விமர்சித்தனர். ஹார்திக் பாண்டியா பேட்டிங்கில் 20 பந்துகளுக்கு 24 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், “ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு சுமாராக இருந்தது. ரன்கள் அதிகமாக அடிக்கப்பட்டுகொண்டிருக்கும்போது பும்ராவுக்கு பந்து வீச வாய்ப்பு தராதது குறித்து என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

மும்பை அணியின் மொத்த வீரர்களும் 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும்போது கேப்டன் 120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக் கூடாது” எனக் கூறியிருந்தார். யூசுப் பதான், “ உங்களது சிறந்த பந்து வீச்சாளரான பும்ராவுக்கு ஓவர் தராதது மோசமான கேப்டன்சி. மேலும் கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு தரும் கேப்டனின் நோக்கமும் எனக்கு புரியவில்லை” என விமர்சித்துள்ளார்.

 

சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

ஐபிஎல் தொடரில் ஐதராபாதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாதிடம் தோல்வியடைந்தது.இந்த நிலையில், நேற்றையப் போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: என்ன ஒரு அருமையான போட்டி. நேற்றையப் போட்டி முழுமையான உற்சாகத்தைத் தந்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் சிறப்பாக செயல்பட்டது. இறுதிவரை போராடிய ஒவ்வொரு மும்பை இந்தியன்ஸ் அணி வீரரை நினைத்தும் பெருமைப்படுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

 

பும்ராவை பயன்படுத்தவில்லை: ஸ்மித் 

ஐபிஎல் தொடரில் ஐதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாதிடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில், 13-வது ஓவர் வரையிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரேயொரு ஓவர் கொடுக்கப்பட்டது குழப்பமளிப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் செய்த சில மாற்றங்கள் என்னை குழப்பமடையச் செய்தது. ஆட்டத்தின் 4-வது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார். அதன்பின் 13-வது ஓவர் வரை அவரை பந்துவீச்சில் பார்க்க முடியவில்லை. அப்போது சன் ரைசர்ஸ் 173 ரன்கள் எடுத்திருந்தது. உங்களது அணியின் சிறந்த பந்துவீச்சாளருக்கு (பும்ரா) தொடர்ந்து பந்துவீச்சு வாய்ப்பளித்து விக்கெட் எடுக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அதை செய்யத் தவறிவிட்டார்கள். அதனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து