முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை : இலங்கை அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      உலகம்
Modi-jeevan 2024-04-02

Source: provided

கொழும்பு : கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

இந்த சூழலில், கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

இலங்கையை பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியா- இலங்கை உடனான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளது. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவ்வாறு இந்திய அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதிலளிக்கும் என்று தெரிவித்தார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து