முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி பெற செய்தால் தென்சென்னையில் மாற்றத்தை கொண்டு வந்தே தீருவேன்: தமிழிசை சவுந்திரராஜன் வாக்குறுதி

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      அரசியல்
Tamilsai-1

சென்னை, தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் தென் சென்னை தொகுதியில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். 

தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்நிலையில், நேற்று  காலை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு அவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது வாக்காளர்கள் மத்தியில் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: 

தென்சென்னையில் பல்வேறு பகுதிகள் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. தென் சென்னையில் மாற்றம் வேண்டும் என்றால் மக்கள் எனக்கு (தாமரை) வாக்களிக்க வேண்டும். நான் ஆளுநராக இருந்தபோது ராஜ்பவனில் புகார் பெட்டி வைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தேன். இந்த நடைமுறையை தென்சென்னையில் உள்ள 6 சட்டமன்ற அலுவலகங்களிலும் செயல்படுத்துவேன்.

அதில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அந்த புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், குறிப்பிட்ட நாள்களில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை சரிசெய்வேன். மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்வதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து