முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு: ரூ.53 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கம் விலை..!

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனையானது. 

சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது.  வரலாற்றில் முதல் முறையாக மார்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்தது. சென்னையில் நேற்று மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையானது.  ஆனால், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும்,  ஒரு கிலோ ரூ.100 குறைந்து, ரூ.84,900-க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றம்  சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து