முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போருக்கு ஆயத்தமாக வேண்டும்: வடகொரிய அதிபர் கிம் பேச்சு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      உலகம்
Kim-Jong-Un 2023 03 30

பியாங்கியாங், வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளதால் போருக்கு தயாராகுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளது கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் கிம் ஜாங் உன், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக் கழகத்தை கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் ஆய்வு செய்த பிறகு பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிம் ஜாங் உன் கூறுகையில், வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே,  கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என்று கூறினார். 

முன்னதாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொள்கிறது.  இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதாக வடகொரியா கூறிய நிலையில், கிம் ஜாங் உன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து