முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வரி விதிப்பால் கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thirupur 2025-08-26

Source: provided

கோவை : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவிற்கு கோவையில் இருந்து அதிகளவில் தங்க நகைகள், என்ஜினீயரிங் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய அளவில் திருப்பூர், கோவையில் இருந்துதான் அமெரிக்காவுக்கு அதிகமான ஏற்றுமதி நடக்கிறது. இதில் ஜவுளி ஏற்றுமதி மட்டும் ஒரு ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 50 சதவீத வரிவிதிப்பால் இந்த பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூரில் பலர் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.

கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்த தொழில் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்கள் தற்போது குறைந்துள்ளன. இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க ஜேம்ஸ் கூறியதாவது:-

எங்களுக்கு வழங்குகின்றன. வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதால் எங்களுக்கு வழங்கப்படும் ஜாப் ஆர்டர்களும் குறைந்துள்ளது. இதனால் கோவையில் உள்ள 35 ஆயிரம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே மத்திய அரசு அமெரிக்காவிடம் இதுகுறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து