முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி : தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

ஸ்ரீநகர் : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இண்டியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. அதன்படி காங்கிரசுக்கு உதம்பூர், ஜம்மு மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளும், தேசிய மாநாட்டு கட்சிக்கு அனந்த்நாக், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய தொகுதிகளும் உறுதியானது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீநகரில் ஷியா தலைவர் அகா ரூஹுல்லாவும், பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 

மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்தாப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சி முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து