முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 5 பேர் பலி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      உலகம்
Australia 2024-04-13

Source: provided

கென்பரா : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொண்டி ஜங்ஷன் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று காலை வழக்கம்போல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அப்போது வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். 

இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து