முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? - இஸ்ரேல் வீடியோ வெளியீடு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      உலகம்
Israel 2024-04-15

Source: provided

ஜெருசலேம் : ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்கள் இஸ்ரேலில் எந்த இடங்களை தாக்கியது என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

99 சதவீத ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் தங்கள் வான்வழியை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.

ஈரான் நடத்திய அதிரடி தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன.

இந்த தாக்குதல் பேரழிவு மற்றும் மிக பெரிய ஆபத்துக்கான துவக்கம் என ஐ.நா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். தங்களை திருப்பி தாக்கினால் தடுக்க முடியாத அளவிற்கு வலுவான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து