முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 10 ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டும்தான் : கேரளாவில் பிரதமர் மோடி பிரசாரம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
Modi 2024-03-19

Source: provided

திருவனந்தபுரம் : கடந்த 10 ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று கேரளாவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 இந்த நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும், இந்தியா கூட்டணி வேட்பாளரகளை ஆதரித்து  ராகுல் காந்தி , மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கேரளாவில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் பரப்புரை மேற்கொண்டனர். தனது சொந்த தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது..“பாஜகவின் தேர்தல் அறிக்கை இந்த நாட்டின் வளர்ச்சியைப் பற்றியது.  நாட்டில் 3 கோடி பெண்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன, அதில் கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் 73 லட்சம் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது வட மற்றும் மேற்கு இந்தியாவில்  தென்னிந்தியாவில் உள்ளதுபோல புதிய புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். புதிய தலைமுறையைச் சார்ந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது.  கடந்த 10 ஆண்டுகளில் இந்த தேசம் எப்படி வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கேரள மக்கள் பார்த்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான். வரும் ஆண்டுகளில் உண்மையான படத்தை பார்க்கப் போகிறீர்கள் என்றார். 

பின்னர் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த புத்தாண்டு கேரளாவின் வளர்ச்சி ஆண்டாக இருக்கும். அதனால் தான் இன்று கேரளா மக்கள் மீண்டும் மோடி அரசு என்று கூறுகிறார்கள். கேரளாவில் இடதுசாரிகளை பயங்கரவாதிகள் என காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. ஆனால், டில்லியில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, தேர்தலுக்கு வியூகம் வகுக்கும்.

வரும் லோக்சபா தேர்தல் நாட்டின் எதிர்காலத்துக்கான முடிவுகளை எடுக்கும் தேர்தல். இந்த தேர்தல் உங்கள் பிரகாசமான எதிர்காலம் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் தேர்தல். காங்., மோசமாக கட்டமைத்த இந்தியாவை பா.ஜ., வலுப்படுத்தியது. இன்றைய இந்தியா, கோவிட் போன்ற தொற்றுநோய்களில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றும் சக்தியாக மாறி உள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும். கேரள அரசு ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கிறது. கேரளாவில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை இடதுசாரி அரசு தடுக்கிறது. வளரும் இந்தியாவின் அடையாளம் நவீன உள்கட்டமைப்பிலிருந்தே இருக்கும். மேற்கு இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுக்கால பா.ஜ., ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டும் தான். கேரளாவிற்கும் இந்தியாவிற்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து