முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு: 2 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Salman-Khan 2023 06 26

மும்பை,  பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு நபர்களை, மும்பை போலீசார், குஜராத்தில் இருந்து கைது செய்துள்ளனர். 

நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி சென்றனர்.  

சல்மான்கானுக்கு ஏற்கெனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.  

இந்நிலையில் சல்மான்கான் வீட்டு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். 

அவர்கள் விக்கி குப்தா, சாகர் பால் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து