முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.200 கோடி சொத்தை தானம் கொடுத்து துறவறம் பூண்ட குஜராத் தம்பதியினர்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      இந்தியா
Gujarat 2024-04-16

Source: provided

காந்திநகர் : குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக அளித்து துறவறம் மேற்கொண்டனர். 

குஜராத் மாநிலத்தின் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி.  தொழிலதிபரான  இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  பவேஷ் பண்டாரியின் 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022 ஆம் ஆண்டில் துறவறம் மேற்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து,  பவேஷ் பண்டாரி தன் மனைவியுடன் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

பவேஷ் பண்டாரிக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. ஜெயின் மதத்தில் துறவறம் பூண்ணும் போது தீட்சை பெறுவது முக்கியமானது. அதன்படி, துறவு மேற்கொள்பவர்கள் தங்கள் சொத்துக்களைத் துறக்க வேண்டும். நாடு முழுவதும் வெறும் காலுடன் நடந்து சென்று யாசகம் பெற்று வாழ்வர்.

துறவிகளான பிறகு அமரும் இடத்தை சுத்தம் செய்ய ஒரு துடைப்பம்,  இரண்டு வெள்ளை உடை,  யாசக கிண்ணம் ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.  இந்த நிலையில் பவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் அண்மையில் 35 பேர் கொண்ட குழுவுடன் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாகப் பயணித்தனர். அரச குடும்பத்தினர் போல உடை அணிந்திருந்த அவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் தானமாக வழங்கிக் கொண்டே சென்றனர்.  இந்த யாத்திரையின் முடிவில் சொத்துக்களை முழுமையாக நன்கொடையாக அளித்துவிட்டு அவர்கள் துறவறம் பூண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து