முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      இந்தியா
Kejrival

புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உட்கொள்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. 

சர்க்கரை நோயாளியான அவர் தனது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு செய்கிறார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அவர் அவருடைய மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுபடுவதாக  கூறி இந்தக் கோரிக்கையை அவரது தரப்பு முன்வைத்துள்ளது. வாரத்தில் 3 நாட்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் மருத்துவரிடம் ஆலோசிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. 

இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் ஜோஹப் ஹுசைன், 

ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகக் கூறும் நபர் சிறையில் தினமும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார்.  இனிப்பு வகைகள், சர்க்கரை கலந்த தேநீர் என உட்கொள்கிறார். தனது ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாகக் கூறி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரும் முனைப்போடு வேண்டுமென்றே கெஜ்ரிவால் இவ்வாறு செய்கிறார் என்றார்.

இதனை எதிர்த்த கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் விவேக் ஜெயின், ஊடகங்களுக்கு தீனி போட வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத் துறை இத்தகைய வாதத்தை முன்வைத்துள்ளது. கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுகிறேன். வேறொரு மேம்பட்ட மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கெஜ்ரிவாலின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து