முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
Vote-2024-04-18

சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில்,  வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. 

நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று (ஏப்.19) நடைபெறவுள்ளது.  தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. பதற்றமான வாக்குச் சாவடியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து