முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
bus-strike

சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.  

நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.19) நடைபெறவுள்ளது.  வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில்,  தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

 

அதன்படி,  சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன்,  807 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 2899 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.   இப்பேருந்துகளின் வாயிலாக நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.  மேலும் சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து