முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாமில் நிலச்சரிவுக்கு 5 பேர் பலி

சனிக்கிழமை, 31 மே 2025      இந்தியா
Assam-rain-2025-05-31

இட்டாநகர், அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தலைநகர் குவாஹாட்டி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காம்ரூப், காம்ரூப் மெட்ரோ, சச்சார் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஐந்து வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 10,000-க்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் உள்பட 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.  

 அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு மாவட்டங்களிலும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகர் தபோர்ஜியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து வரும் கனமழை மற்றும் தீஸ்தா நதியின் நீர்மட்டம் தொடந்து அதிகரித்து வருவதால் வானிலை ஆய்வுமையம் அங்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது. மேலும், மங்கான், கியால்ஷிங் மற்றும் சோரெங் மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து