முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
Saku 2024-04-19

சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

சென்னை மதுரவாயல் நெற்குன்றம் ஆர்.எம்.பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்தபின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது; உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்தனர்.  மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வரும் அனைவருக்கும் வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும். இரவு 8 மணி ஆனாலும் டோக்கன் பெற்ற இறுதி நபர் வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து