முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா
Modi

ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்கு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது., பாதுகாப்பான தேசம் மற்றும் வலுவான அரசின் முக்கியத்துவத்தை ராஜஸ்தான் மக்கள் அறிவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தலில், வலுவான பா.ஜ., ஆட்சி அமைக்க ஓட்டளித்தீர்கள். முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற்றால், உங்கள் சொத்துகளை பறிமுதல் செய்து ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

முஸ்லீம்களுக்கு முதல் உரிமை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான, நேர்மையான அரசு என்ன செய்ய முடியும் என்பதை கடந்த பத்து ஆண்டுகளில் அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஹனுமன் மற்றும் ராமரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதிக்கிறது. ஒற்றுமையே ராஜஸ்தானின் மிகப்பெரிய பலம், இங்கு மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலை அம்பலப்படுத்தினேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் பணவீக்கம் நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பா.ஜ., ஆட்சியில் மாபியா, குற்றவாளிகள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து