முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு பெடல் - விமர்சனம்

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Monkey-Pedal-Review 2024-05

Source: provided

மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன். சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டு கம்பீரமாக ஊரை சுற்றி வளர வேண்டும் என கனவு காண்கிறான்.

அவனது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப அவனது நண்பர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கோடைகால விடுமுறையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்து கற்றுக்கொள்ள தீர்மானிக்கிறார்கள். கற்றுக்கொண்டு ஊரை வலம் வர முடிந்ததா? இல்லையா? என்பதும், அதற்காக அவர்கள் சந்தித்த சிக்கல்களும், சவால்களும் என்ன என்பது தான் படத்தின் கதை. கதையின் முதன்மையான பாத்திரங்களில் நடித்திருக்கும் சிறார்கள்.

அச்சு அசலாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். கிராமத்தில் தன் தந்தை மீது சுமத்தப்பட்டிருக்கும் 'நடராஜா சர்வீஸ்' காளி வெங்கட் வழக்கம்போல் உணர்வுபூர்வமான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்கிறார். ஜிப்ரானின் பாடல்களும், பின்னணியிசையும் மண் மணம் மாறாத சுகம். சுமி பாஸ்கரனின் ஒளிப்பதிவும் இயல்பு. இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். மொத்தத்தில் குரங்கு பெடலை ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து