முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை: அரசியலுக்கு மீண்டும் திரும்பும் ராஜபக்ச சகோதரர்கள்

திங்கட்கிழமை, 27 மே 2024      உலகம்
Rajapaksa

Source: provided

கொழும்பு : இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால்,  போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அரசியலைவிட்டு விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அவர் பதவி விலகினார்.  எதிர்க்கட்சியை சேர்ந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றார்.  அதனுடன் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவும் பதவி விலகினார்.

இந்த நிலையில்,  தலாவா என்ற கிராமத்தில் ராஜபக்சக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி பேரணி நடத்தியது. இது தொடர்பாக அக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை இந்தப் பேரணி மூலம் தொடங்கவுள்ளோம்” என்றார்.

அந்நாட்டின் சட்டப்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  அந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தலை வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை எஸ்எல்பிபி தற்போது வரை அறிவிக்கவில்லை.  ஆனால், பிற முக்கிய எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டன.  ஆனால், குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும் என எஸ்எல்பிபி வலியுறுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து