முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 27 மே 2024      தமிழகம்
Chavik-Sankar 2024-05-27

Source: provided

மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவரை கஞ்சா வழக்கில் தேனி மாவட்டம் பிசிபட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செங்கமல செல்வன் முன்பு நேற்று (மே.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனக் கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து