முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு

திங்கட்கிழமை, 13 மே 2024      விளையாட்டு
Bengaluru 2024-05-10

Source: provided

பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

டெல்லி பந்துவீச்சு...

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் (மே 12) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

187 ரன்கள் குவிப்பு...

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இம்பேக்ட் வீரர்... 

188 ரன்களை இலக்காக துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மெக்கர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்களில் அவுட் ஆக ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்களை அடுத்து பெவிலியன் திரும்பினார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் ரஷிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

140 ரன்களில் அவுட்...

19.1 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளையும் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  இந்த வெற்றி மூலம் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் பெங்களூரு அணி தொடர்ந்து நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து