முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Election 2023-11-06

Source: provided

லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. 

இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று (20-ம் தேதி) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.  மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து