முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      ஆன்மிகம்
Chathuragiri 2023 07-17

Source: provided

விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில்  இந்த வருடம் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்தது. பல மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. மேலும் ஏப்ரல் மாதமே வெப்ப அலை வீசத் தொடங்கியது. இதனையடுத்து கோடை தொடங்கியதிலிருந்து வெயில் உக்கிரம் காட்டியது. 

இதனிடையே, கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதே போல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில் மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கனமழையால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சதுரகிரி கோயிலுக்கு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் செல்லும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து