முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலக்சன் விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மே 2024      சினிமா
Elekson-review 2024-05-20

Source: provided

மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன், இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் நாயகன் விஜய்குமாருக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை என்றாலும் தனது உறவினரின் தூண்டுதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அப்பாவின் பேச்சையும் மீறி விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க, அதன் மூலம் அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து விஜய்குமார் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, இல்லையா? என்பது தான் ‘எலக்சன்’.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், இளம் அரசியல்வாதியாக எதார்த்தமான நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

இயக்குநர் தமிழ், அழகிய பெரியவன், விஜய்குமார் ஆகியோரது வசனங்கள் அனைத்தும் அனல் தெறிக்கும் விதத்தில் அமைந்து, திரைக்கதைக்கு பலமாக பயணப்பட்டிருக்கிறது. 

நமக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம், என்று நினைப்பவர்களுக்கு கூட அரசியலோடு சம்மந்தம் இருக்கிறது, என்ற உண்மையை படம் முழுவதும் சொல்லியிருக்கும் இயக்குநர் தமிழ், உள்ளாட்சி தேர்தலின் அரசியலை அப்பட்டமாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘எலக்சன்’ வாக்களிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து