முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது?ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

வியாழக்கிழமை, 23 மே 2024      விளையாட்டு
22-Ram-50

Source: provided

மும்பை:ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பது இன்று தெரியவரும். எலிமினேட்டர் 2-வது போட்டியில் இன்று ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் வெற்றி...

ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் முதல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து அபாராமாக வெற்றிப்பெற்றது.

ஐதராபாத் அணியுடன்... 

பெங்களூரு அணி சார்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளும், பெர்குசன், கரண் ஷர்மா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும்.

கைப்பற்றியுள்ளதா..? 

இந்நிலையில்,முன்பு எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பு எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய கொல்கத்தா அணி அதில் ஆர்.சி.பி-யையும், குவாலிபையர் 2 போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தியது. இருப்பினும் சென்னை அணியிடம் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதில் கொல்கத்தாவையும், குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் அணியையும் வீழ்த்தியது.

ஐதராபாத் வெற்றி... 

இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி-யை வென்று டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த வகையில் ஐ.பி.எல். வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டுமே எலிமினேட்டர் சுற்றில் விளையாடி ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. மற்ற எந்த அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து