முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்

புதன்கிழமை, 29 மே 2024      தமிழகம்
6-planets 2024-05-29

Source: provided

சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.  இந்நிகழ்வை வரும் ஜூன் 3, 4-ம் தேதிகளில் கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் அடிவானில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் காணலாம். வியாழன், புதன், செவ்வாய், வருணன், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்களையும் ஒரே வரிசையில் பார்க்க முடியும்.

அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது. 

ஜூன் 3-ம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இந்த 6 கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. 

ஜூன் 3-ம் தேதி சனிக்கோளுக்கு கீழேயும், 4-ம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இது கண்ணுக்கு விருந்தாக அமையும்.  இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி, 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து