முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

புதன்கிழமை, 29 மே 2024      தமிழகம்
Jayakumar 2023 04 15

Source: provided

சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது  என்று தமிழக பா.ஜ.க.  தலைவர் அண்ணாமலைக்கு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அவரது அன்றைய உண்மையான நிலைப்பாடு.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பா.ஜ.க.வின் எண்ணம்.

ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஒடிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும் மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுக நீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பா.ஜ.க.வின் கொடூர கொள்கை.

தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி அண்ணாமலை, தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது. 

 மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டு விட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பா.ஜ.க. உணரப் போகிறதோ?

தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும் அத்துடன், ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உரையையும், ஆடியோ பதிவாக அவர் இணைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து