முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

சனிக்கிழமை, 8 ஜூன் 2024      விளையாட்டு
Afghan 2024-05-04

Source: provided

நியூயார்க் : 75 ரன்களில் நியூசிலாந்து அணியை சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

156 ரன்கள்  இலக்கு...

டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 159/6 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான குர்பாஜ் (80), இப்ராஹிம் ஜர்டன்(44) சிறப்பாக விளையாடினார்கள். அடுத்து வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்து சார்பில் போல்ட், ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

நெட் ரன் ரேட்...

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் 75 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்தில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 18, மேட் ஹென்ரி 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்கள். இதனால் நியூசிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். கேப்டன் ரஷித் கான், பரூக்கி தலா 4 விக்கெட்டுகளும் மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நெட் ரன் ரேட்டில் +5.225 பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யோசிக்கவில்லை...

வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த கேப்டன் ரஷித் கான், எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிப்பதைக் காட்டிலும், எங்களது அணியின் திறமைகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். இந்த ஒரு விஷயத்தையே அணியில் உள்ள அனைவருக்கும் நான் கூறி வருகிறேன். எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதே முக்கியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து