முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்: ஜி 7 மாநாட்டில் ஜோபைடன், ஜெலன்ஸ்கி கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      உலகம்
Jobaidan-Jelensky 2024-05-1

Source: provided

ரோம் : இத்தாலியில் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் மற்றும் உக்ரைன் அதிபர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில்  இரு நாடுகளுக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். 

நேற்று முன்தினம் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு  உக்ரைனுக்கு பல்வேறு வகையில் ராணுவ உதவி மற்றும் ராணுவ பயிற்சியை அமெரிக்கா வழங்கும். 

ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அத்துடன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் தனது நாட்டிற்கு இது ஒரு பாலமாக செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷ்யா எந்தவிதமான ஆயுத தாக்குதலை நடத்தினாலும், அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனின் ராணுவத்தை சிறப்பாக கட்டமைக்கவும், பயிற்சியில் ஒத்துழைக்கவும் உக்ரைனின் உள்நாட்டு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கவும் இந்த ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஜி7 மாநாட்டின் இடையே, உக்ரைனுடன் ஜப்பானும் பாதுகாப்பு ஒப்பந்தம்  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து