எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டுள்ளார். இவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து உள்ளார்.
இந்த குழுவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் உள்ளூர் எம்.எல்.ஏ. ஆர்.லட்சுமணனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் விக்கிரவாண்டியில் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் உள்ளூர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
தேர்தலில் யார் யாருக்கு எந்த ஏரியாவை ஒதுக்குவது என்றும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் காணை மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்தந்த நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளனர்.
இதே போல் காணை வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.இதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் எவ்வளவு ஓட்டுகளை பார்க்க சொல்வது என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு உதவ கட்சி நிர்வாகிகளையும், பேச்சாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என்று தலைமை கூறி உள்ளதால் இப்போதே கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டி செல்ல தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி கூட்டணி கட்சி உள்ளூர் பிரமுகர்களும் பிரசாரத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா
-
முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
07 Nov 2025சென்னை, முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.


