முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இ.வி.எம்.களை ஒழிக்க வேண்டும்: ராகுல் காந்தி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023-06-01

Source: provided

புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) செயல்படும் முறையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என எலான் மஸ்க் வெளியிட்டிருந்த பதிவு பல்வேறு தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என பதிலளித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து