முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
TN-Safety

சென்னை, தமிழக கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 

சாகர் கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த ஒத்திகை பின்னர் அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம், புதுவையில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்று 20-ம் தேதி வரை  நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையை  கடலோர காவல் படையினர், உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்தி வருகிறார்கள்.

இதையொட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவும் நபர் களை உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மடக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சமாகும்.

இதன்படி தீவிரவாதிகள் போல வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழையும் போலீசாரை பாதுகாப்பு படையினர் பல இடங்களில் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை வேட்டையின் போது கவனக்குறைவாக செயல்படும் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

 சென்னையில் மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் சுற்றுலா கடற்கைரை பகுதிகள், காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 

இதனை இன்று மாலை வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று சென்னையை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. 

கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த மீனவர்கள் போன்று வேடமிட்டு வந்த போலீசாரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். இதே போல் கடலோர காவல் படையினர், போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் படகில் சென்று சந்தேகப்படும் நபர்கள் படகில் வருகிறார்களா? எனவும் கண்காணித்தனர். 

கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் புறவழிச் சாலை, பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் 89 போலீசார், 20 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.  

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன் வளத்துறை, வருவாய்த்துறை யினரும் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் மேற்பார்வையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டது. நாகை மாவட்டம், வேதா ரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்ப வனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிரா மங்களில் டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். 

கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வை யில் நடத்தப்பட்ட இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து