முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் சிறுவனின் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      சினிமா
Vejiy 2024-06-22

சென்னை, நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிறுவன் ஒருவனை சாகசம் செய்ய வைக்க நினைத்து அவர் கையில் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் அவர் களம் காண உள்ளார். அவர் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். 

 கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பாக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை, நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. 

இதில் சிறுவன் ஒருவன், நெருப்பில் எரியும் ஓடுகளை உடைக்கும் சாகசம் நடத்தப்பட்டது. அப்போது சிறுவன் கையில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை பற்ற வைத்தனர். ஓடுகளை உடைத்த பின்னரும் சிறுவன் கையில் பற்றிய தீ அணையாததால் அவர் வலியால் அலறி துடித்தார். 

அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கும், அவர் அருகில் இருந்த விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து