எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விஷ சாராய விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள அ.தி.மு.க., நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று காலை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரத்தில் நேற்று நடைபெற இருந்த அ.தி.மு.க. போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டதிற்கு வந்திருந்தவர்கள் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |