முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த மே மாதம் பணிஓய்வு பெற்றார். அதையடுத்து மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை (கே.ஆர்.ஸ்ரீராம்) நியமிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 1963 செப்டம்பர் 28 அன்று மும்பையில் பிறந்த கே.ஆர்.ஸ்ரீராம், மும்பை பல்கலைக்கழகத்தில் சட்ட இளநிலை படிப்பை முடித்தவர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கடல் சார் சட்டத்தில் சட்ட முதுநிலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன்பிறகு மகாராஷ்டிரா - கோவா பார் கவுன்சிலில் 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவர், மூத்த வழக்கறிஞர் எஸ். வெங்கிடேஸ்வரனின் அலுவலகத்தில் ஜூனியராக பணியாற்றியுள்ளார்.

கடல் சார் சர்வதேச வணிகம், துறைமுகம் மற்றும் சுங்கத் துறை, மோட்டார் வாகனச் சட்டம், நிறுவனச் சட்டம் போன்றவற்றில் இவர் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதியன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மூன்றாவது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் அதீத அக்கறை கொண்ட நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தர்மிஸ்தா மித்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். சிறந்த கோல்ப் விளையாட்டு வீரரான இவர், இந்தியா மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து