முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸாரால் சுடப்பட்ட ரவுடி துரைசாமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      தமிழகம்
Gun 2023-10-05

Source: provided

திருச்சி: திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை(ஜூலை 11) புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தார். இவர் மீது 4 கொலை மற்றும் வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ரவுடி துரை உயிரிழந்த தகவலறிந்த அவரின் தாய் மல்லிகா, சகோதரி சசிகலா ஆகியோர் வியாழக்கிழமை இரவு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். இந்த நிலையில், ரவுடி துரைசாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உடற்கூராய்வுக்கு பின் அவரது உடல் நேற்று (ஜூலை 12) அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அவரது சொந்த ஊரான திருச்சியில் தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் மருத்துவமனையில் உரிய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடலை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் உரிய போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து