முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டியில் தி.மு.க வெற்றி: தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      தமிழகம்
CM-1 2024-07-13

Source: provided

சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றியை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்களுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கினார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. அப்போது சென்னையில் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் தி.மு.க. பேட்பாளர் அன்னீயூர் சிவா வெற்றிப்பெற்றார்.  இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் தி.மு.க. தொண்டர்கள் இருந்தனர் அதேபோல், சென்னையில் தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியை கொடுத்துள்ளனர். வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து