முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கில் அமெரிக்கருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      உலகம்
Jail 2024-05-01

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் என்பவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், 2019ஆம் ஆண்டில் கேத்லீன் ஹென்றி என்ற பெண் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். ஆனால், பிரையன் ஸ்டீவன் ஸ்மித் என்பவர் தான் 2019ஆம் ஆண்டில் கேத்லீனை கொன்று, அதை விடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.

கேத்லீனை கொன்ற விடியோ வைத்திருந்த மொபைலை, ஸ்டீவன் காரில் வைத்திருந்தபோது, மொபைலை திருடிய பெண் ஒருவர் அதிலிருந்த விடியோ குறித்து, காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஸ்டீவன் ஸ்மித்தை கைது செய்தனர். அதுமட்டுமின்றி, ஸ்டீவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவருடைய மனைவியான வெரோனிகாவையும் கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

ஸ்டீவனின் மனைவியின் கொலை குறித்து அவர் கூறியதாவது, ``வெரோனிகா வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, துர்நாற்றமாக இருந்ததால், அவரைக் குளிக்கச் சொன்னேன்; ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனால், கோபமுற்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு பேரை கொலை செய்ததற்காக, தலா 99 ஆண்டுகள் வீதம் 198 ஆண்டுகள் மற்றும் கேத்லீனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து