முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிக்கி பாண்டிங் நீக்கம்

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      விளையாட்டு
Ricky-Ponting 2023-10-17

Source: provided

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 சீசன்களாக பணியாற்றி வந்தார். இவரது தலைமையின் கீழ் டெல்லி அணி சிறப்பாக செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதிலும், கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும் கடந்த 3 சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.

இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பாண்டிங்கை நீக்குவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகம், தனது எக்ஸ் பக்கத்தில், "7 சீசன்களுக்குப் பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் ரிக்கி பாண்டிங்கை விட்டு விலக முடிவு செய்துள்ளது. இது ஒரு சிறந்த பயணம், பயிற்சியாளர்! எல்லாவற்றிற்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளது.

____________________________________________________________________________________

காம்பீருக்கு புகழாரம் 

அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், நமக்கு எதிராக விளையாடுபவரைக் காட்டிலும் 100 சதவிகித உழைப்பை கொடுத்து நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான். அணியில் ஆலோசனை நடைபெறும் போதும் மற்றும் தனித்தனியாக வீரர்களிடத்தில் பேசும் போதும் கௌதம் கம்பீர் குறைவாகவே பேசுவார்  என்றார்.

____________________________________________________________________________________

கோலிக்கு ஆண்டர்சன் பாராட்டு

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர். 

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்பு பேசிய ஆண்டர்சன், விராட் கோலியை புகழ்ந்தார். "ஆரம்ப காலத்தில் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பந்திலும் அவரை வீழ்த்திவிடலாம் என்றே தோன்றும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் அவரை வீழ்த்த முடியாது. அவருக்கு எதிராக விளையாடும்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும்" என்று ஆண்டர்சன் தெரிவித்தார். ஆண்டர்சனுக்கு எதிராக கோலி 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 7 முறை கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.

____________________________________________________________________________________

விம்பிள்டன் பரிசுத்தொகை 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார். இந்நிலையில், விம்பிள்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் சாம்பியன்களுக்கு தலா ரூ.28 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு தலா ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.534 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகமாகும். முதல் சுற்றில் வெளியேறும் போட்டியாளர்கள் 63 லட்சம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து