முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உம்மன் சாண்டி நினைவு தினம்: ராகுல் வெளியிட்ட வீடியோ

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
oommenchandy

திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவருமான மறைந்த உம்மன் சாண்டியின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 

உம்மன் சாண்டி, கேரள மாநிலத்தின் முதல்வராக 2004-2006 மற்றும் 2011- 2016 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும்,  கேரளாவில், புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ. போலவே செயலாற்றியவர். 

மேலும் 1970 முதல் 2023 வரையில் புதுப்பள்ளி எம்.எல்.ஏ.வாக உம்மன் சாண்டி இருந்துள்ளார். உம்மன் சாண்டி கடந்தாண்டு (2023) ஜூலை 18-ம் தேதி வயது முதிர்வு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இயற்கை எய்தினார். 

இந்நிலையில் உம்மன் சாண்டியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், மக்களின் உண்மையான தலைவரான உம்மன் சாண்டி, தனது வாழ்நாளை கேரள மக்களின் சேவைக்காக தளராத அர்ப்பணிப்புடன் செலவிட்டார். அவரது பயணமும் இந்திய தேசிய காங்கிரசின் மரபும் பின்னிப் பிணைந்துள்ளது. 

ஒரு மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும், முதல்வராகவும் ஒரு ஜனநாயகத்தின் மாண்பை உள்ளடக்கி, பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் உள்ளவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். 

அவரது வாழ்க்கை தொலைநோக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அக்கறையுடன் தலைமைத்துவத்திற்கு ஒரு நற்சான்றாக நிற்கிறது. உம்மன் சாண்டியின் நினைவு நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரை ஒரு இரக்கமுள்ள, பணிவான, அர்ப்பணிப்புள்ள மக்கள் தலைவராக கொண்டாட வேண்டிய கேரள வரலாற்றில் அழிக்க முடியாத ஓர் பகுதியாகும். இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து