முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 2021-ம் ஆண்டு புதியதாக பொறுபேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதி அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. 

அதன் பிறகு, தற்போது ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி தமிழ்நாடு என பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 

கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க... உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க.  ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. என்று கூறி அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து