எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம் : கர்நாடகத்தில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 116.60 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 8 அடியே உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 44,617 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 2,566 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், இன்னும் 3 நாட்களுக்குள் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி படுகையில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை தண்ணீர் திறப்பு அளவு சற்று குறைக்கப்பட்டு வினாடிக்கு 61,316 கன அடி வீதம் நீர் கபினி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாக உள்ளது.இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் நஞ்சன்கூடு அருகே திருமாகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு கடந்த 17-ம் தேதி மாலை வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு 35,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் நேற்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 17-ம் தேதி மாலை 47.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 51.38 அடியாக உயர்ந்தது.
நீர்வரத்தை விட அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதால் நேற்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நீர் இருப்பு 21.18 டி.எம்.சி.யாக உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டு முதல் மேட்டூர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் கரையோர தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு
17 Mar 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.
-
மும்பை வீரருக்கு நோட்டீஸ்
17 Mar 202518-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்?
17 Mar 2025லக்னோ, மார்ச் 18-
-
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
17 Mar 2025சென்னை : நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் : சிறப்பு இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்
17 Mar 2025சென்னை : தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்க
-
மும்பைக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.டோனி 8-வது டவுன்: சி.எஸ்.கே. நிர்வாகம் தகவல்
17 Mar 2025சென்னை : மார்ச் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் - சி.எஸ்.கே. அணிகள் மோதுகின்றன.
-
டில்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக பிளெஸ்ஸிஸ் நியமனம்
17 Mar 2025புதுடில்லி : டில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19-ம் தேதி துவக்கம்
17 Mar 2025சென்னை : ஐ.பி.எல். 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-03-2025.
18 Mar 2025 -
ஐ.பி.எல். அணி கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
17 Mar 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். தொடரில் அணி கேப்டன்கள் பெறப்போகும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
மாஸ்டர்ஸ் லீக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு
17 Mar 2025ராய்ப்பூர் : மாஸ்டர்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது.
மாஸ்டர்ஸ் லீக்...
-
மலையேற்ற வீரர்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
18 Mar 2025சென்னை: தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை கண்டு உலகம் வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
18 Mar 2025புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
-
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க வலுவான தூதரக முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Mar 2025சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் ப
-
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் துவக்கம்
18 Mar 2025சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்றது.
-
ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் 66 ஆயிரம் ரூபாய்
18 Mar 2025சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் ரூ.66 ஆயிரத்தை தொட்டுள்ளது.
-
நெல்லை ஓட்டலில் ரூ.1 லட்சம் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
18 Mar 2025நெல்லை: நெல்லை தாழையூத்து அருகே ஓட்டலில் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சிம்பொனி வேலியண்ட்டை வழங்கி மீண்டும் வரலாறு படைத்த இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி புகழாரம்
18 Mar 2025டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
பிரேமலதா விஜயகாந்துக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
18 Mar 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
-
குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
18 Mar 2025சென்னை: குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர். தெரிவித்தார்.
-
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
18 Mar 2025ராமேஸ்வரம்: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பில் அநீதி: திருச்சி சிவா எம்.பி. பேச்சு
18 Mar 2025புதுடெல்லி: தொகுதி மறுசீரமைப்பில் எங்களுக்கு அநீதி இழைக்கப்படும் சூழல் உள்ளது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்..